ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதிக்கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. கறுப்பின மக்களின் போராட்டத்தால் பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பற்றி கிறிஸ் கெய்ல், டேரன் சமி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் விவகாரம் பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.