தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாகுபாடின்றி வங்கதேச வீரருக்கு உதவி செய்த இந்திய மருத்துவர்! - Indvsban test

கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய பவுலர் ஷமியின் பந்து தாக்கி காயமடைந்த வங்கதேச வீரருக்கு இந்திய மருத்துவக் குழுவின் பிசியோதெரபிஸ்ட் உதவிய வீடியோவை பிசிசிஐ பதிவிட்டுள்ளது.

test

By

Published : Nov 22, 2019, 5:46 PM IST

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இந்தப் போட்டியில் இந்திய பவுலர் ஷமி வீசிய பந்து வங்கதேச வீரர் நயீன் ஹாசனின் ஹெல்மட்டில் பலமாக தாக்கியது. இதனால் நயீன் லேசாக தடுமாறினார். இதைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நயீமிடம் சென்றார். பின்னர் இந்திய அணியின் மருத்துவக் குழுவில் இருக்கும் நிதின் பட்டேலும் மைதானத்திற்குள் வந்து வங்கதேச வீரருக்கு மருத்துவ உதவி அளித்தார்.

இந்த வீடியோவை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு, கிரிக்கெட்டின் சகோதரத்துவம் என பதிவிட்டனர். இப்போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details