தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புதிய விதிமுறைகளுக்கு பாக் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் - முஷ்டாக் அகமது! - ஐசிசி விதிமுறைகள் குறித்து முஷ்டாக் அகமது

லண்டன்: கரோனா காரணமாக தற்போது ஐசிசி விதித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் என அந்த அணியின் ஸ்பின் பயிற்சியாளர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.

spinners-are-being-taught-new-methods-to-shine-ball-says-mushtaq-ahmed
spinners-are-being-taught-new-methods-to-shine-ball-says-mushtaq-ahmed

By

Published : Jul 10, 2020, 6:50 PM IST

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் அடங்கிய டி20 டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. தற்போது பாகிஸ்தான் வீரர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு அவர்கள் ஜூலை 13ஆம் தேதி டெர்பிஷையருக்குச் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே கடந்த ஜூலை 5,6 ஆகிய தேதிகளில் வொர்செஸ்டரில் அணிக்குழுக்குள் இரண்டு நாள் பயிற்சி போட்டிகளில் விளையாடினர்.

கரோனா வைரஸ் காரணமாக பந்தை பளபளக்க செய்ய உமிழ்நீரை பயன்படுத்த ஐசிசி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பயிற்சியின் போது வீரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் ஐசிசி தெரிவித்திருந்தது.

முஷ்டாக் அகமது

இந்நிலையில், ஐசிசி விதித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் என அந்த அணியின் ஸ்பின் பயிற்சியாளர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "காலம் காலமாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை பளபளக்க செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஐசிசி விதித்துள்ள புதிய விதிமுறைகளின்படி உமிழ்நீருக்கு பதிலாக வேறு புதிய முறைகள் மூலம் அவர்கள் பந்தை பளபளக்க செய்ய கற்றுக்கொண்டனர்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சற்று சவால் நிறைந்ததுதான். இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள வீரர்கள் விரைவில் தயாராகுவர்.

இந்த தொடரில் பங்கேற்பது மட்டுமல்லாமல் தொடரை வெல்லக்கூடிய வீரர்களும் எங்களிடம் உள்ளனர் என்று நான் நம்புகிறேன். மேலும் பார்வையாளர்களின்றி இந்த தொடர் நடைபெற உள்ளதால் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஒல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 13ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதியும் சௌதாம்டனில் நடைபெற உள்ளது.

இப்போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இன்றி காலி மைதானங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details