உலகில் பலகோடி ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு சர்வதேச போட்டிகளையும் ஒளிபரப்ப பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.
அந்த வகையில் நியூசிலாந்தில் நடைபெறும் அனைத்து வகையான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகளையும் தற்போது ஸ்பார்க் ஸ்போர்ட் நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வாங்கியுள்ளது.
இதற்கு முன் நியூசிலாந்து கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு வரை வாங்கியிருந்தது. தற்போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடனான ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் ஸ்பார்க் ஸ்போர்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஸ்பார்க் ஸ்போர்ட் நிறுவனத்தின் ஒளிபரப்பு ஒப்பந்தமானது வருகிற ஏப்ரல் 2020ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கால்பந்து: ரூ.786 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஈடன் ஹசார்ட்!