தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இளம் வீரர்களுக்கு ஃபீல்டிங் நுணுக்கங்களை கற்றுத் தரும் ஜாம்பவான் ஜான்டி! - சேலத்தில் ஜான்டி ரோட்ஸ்

சேலம்: இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரரான ஜான்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சி குறித்த நுணக்கங்களைக் கற்றுத்தந்துள்ளார்.

Johnty Rhodes

By

Published : Nov 25, 2019, 6:38 PM IST

சேலத்தில் க்ரீன் ட்ரி கிரிக்கெட் அகாடெமி சார்பில், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த, சிறந்த 50 இளம் வீரர்களுக்கு, குமரகிரி அருகே உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஃபீல்டிங் குறித்த நுணக்கங்களைக் கற்றுத்தர, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் வருகைத் தந்துள்ளார்.

அவர் வீரர்களுக்கு ஃபீல்டிங் குறித்த நுணக்கங்களை பயிற்றுவித்தார். ஜான்டி ரோட்ஸின் வருகையால் வீரர்களும் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். "இது போன்ற சர்வதேச அளவிலான வீரர்களை கொண்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது கிரிக்கெட்டில் அவர்கள் உயர்ந்த இடத்தை பிடிக்க முடியும்" என க்ரீன் ட்ரீ கிரிக்கெட் அகாடமி தலைவர் அருண் தெரிவித்தார்.

ஜான்டி ரோட்ஸ்

ஜான்டி ரோட்ஸ் பயிற்சி அளிக்கும் போது தனது ஃபீல்டிங் குறித்த அனுபவங்களை தங்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும், அவரது ஃபீல்டிங் நுணுக்கங்கள் புதுமையாக இருந்ததாகவும் வீரர்கள் தெரிவித்தனர். நேற்று தொடங்கிய இந்த பயிற்சி நாளையுடன் முடியவுள்ளது.

அருண்

ABOUT THE AUTHOR

...view details