இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஆறு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை ப்ரியா புனியா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினார்.
#INDWvsSAW: தெறிக்கவிட்ட ஜூலன் கோஸ்வாமி - 164 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - Smriti Mandhana injury
ஜூலன் கோஸ்வாமியின் அசத்தலான பந்துவீச்சால் இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான லிஸல் லீ, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் பந்துவீச்சில் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்காவின் மற்ற வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், அந்த அணி 45.1 ஓவரில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக மரிசானே கேப் 54 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் ஜூலன் கோஸ்வாமி மூன்று, ஷிகா பாண்டே, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.