பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான 20 பேர் அடங்கிய அணியை இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு அந்நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அச்சோதனையின் முடிவில் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின், தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று பாகிஸ்தானுக்குச் சென்றனர்.
பாகிஸ்தானுக்கு செல்லும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் அவர்கள் முதலாவது போட்டிக்காக கராச்சிக்கு செல்லவுள்ளனர்.
பாகிஸ்தான் அணி: அபித் அலி, அப்துல்லா ஷாஃபிக், இம்ரான் பட், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), ஃபவாத் ஆலம், கம்ரான் குலாம், சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல், பஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சர்பராஸ் அகமது, நவுமன் அலி , சஜித் கான், யாசிர் ஷா, ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, தபீஷ் கான்.
தென் ஆப்பிரிக்க அணி: குயின்டன் டி காக் (கேப்டன்), டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், ஃபாப் டூ பிளெசிஸ், டீன் எல்கர், காகிசோ ரபாடா, டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, ராஸி வான்டெர் டுசென், அன்ரிச் நார்ட்ஜே, வியான் முல்டர், லூத்தோ சிபாம்லா, ஹென்ட்ரிக்ஸ், கைல் வெர்ரெய்ன், சரேல் எர்வி, கீகன் பீட்டர்சன், தப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே, டேரின் டுபவில்லன், மார்கோ ஜான்சன்.
இதையும் படிங்க: கபா டெஸ்ட்: நடராஜன், சுந்தர், ஷர்துல் பந்துவீச்சில் சுருண்டது ஆஸி.