தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதி தரம்சாலாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கு பின் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு, முன்னாள் கேப்டன் டூபிளெசிஸ், வான் டர் டூசேன் ஆகியோர் திரும்பியுள்ளனர். மேலும், புதுமுக பந்துவீச்சாளர் ஜார்ஜ் லின்டே தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.