தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் ஆறு வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகவுள்ளனர் என்பதுதான். அதில் மாலன், செகண்ட், டேன் பாட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், பியூரன் ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகவுள்ளனர்.
இதில் மாலன் மற்றும் செகண்ட் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்கின்றனர். மேலும் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சீனுராம் முத்துசாமி, டேன் பியட் ஆகியோர் இந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), டெம்பா பவுமா, குயின்டன் டி காக், டீன் எல்கர், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகாராஜ், பீட்டர் மாலன், ஐடன் மார்க்ராம், ஜுபைர் ஹம்ஸா, அன்ரிச் நார்ட்ஜே, டேன் பேட்டர்சன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, வெர்னான் பிலாண்டர், டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, ரூடி செகண்ட், ராஸி வான் டெர் டுசென்.
இதையும் படிங்க: முதல் போட்டியிலேயே காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் - தொடரிலிருந்து வெளியேற்றம்!