#INDvsRSA: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 189 ரன்களும் எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப்படைத்தது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளன்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜ் பீல்டிங்கின் போது காயமடைந்தார்.