தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆகஸ்ட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்! - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

வரும் ஆகஸ்ட் மாதத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

South Africa eye T20I home series against India in August if pandemic subsides
South Africa eye T20I home series against India in August if pandemic subsides

By

Published : May 22, 2020, 11:50 AM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, தற்போது நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த மார்ச் மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மீதமிருந்த இரண்டு போட்டிகள் கரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெறுவது குறித்து இரு நாட்டு வாரியங்களும் பேச்சிவார்த்தையில் ஈடுபட்டன. அதன் பலனாக, வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு நாட்டு அரசுகளும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தத் தொடர் நடைபெறும் என தெரிகிறது.

இதையும் படிங்க:பிக் பாஷ் டி20 தொடரில் பங்கேற்பது குறித்து மனம் திறந்த வார்னர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details