தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இதனிடையே ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் கூட உபயோகிக்காமல், வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் உபயோகித்தது. இதனால் மூன்றாம் நாள் ஆட்டம் மூன்று ஓவர்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி காலதாமதப்படுத்தி ஓவர்களை வீசியதால், இது ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதிகளின் அடிப்படையில் தண்டனைக்குறிய செயலாகும். இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆறு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மதிப்பிழப்பு புள்ளிகளை வழங்கியும், போட்டி கட்டணத்திலிருந்து 60 சதவிகிதம் அபராதம் விதித்தும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் ஐசிசி மூன்றாவது முறையாக மதிப்பிழப்பு புள்ளியை வழங்கியுள்ளது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்க அணியின் பிலாண்டர் ஆகியோர் மீது ஐசிசி ஒழுங்கு நடத்தை விதிகளின் அடிப்படையில் அபராதமும், மதிப்பிழப்பு புள்ளியையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வுக்கு முன் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் - ஐசிசி அபராதம்!