தெற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்ட 'ஆம்பன்' புயல், அதிதீவிரப் புயலாக மாறி மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. இதனால் மேற்கு வங்க மாநிலம், வங்க தேச நாடு ஆகியவை கடுமையான பாதிப்பிற்குள்ளாகின. இந்நிலையில், ஆம்பன் புயலால் கொல்கத்தாவில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் வீட்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் புயலால் சாய்ந்த மாமரத்தை பால்கனியிலிருந்து குடும்பத்தினருடன் மீண்டும் அதன் இடத்தில் பொருத்தினார். இந்தப் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு மட்டுமில்லாமல், வீட்டிலுள்ள மாமரத்தைத் தூக்கி, இழுத்து மீண்டும் சரிசெய்ய அதிக வலிமை தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.