இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி என்று சொன்னால் நிச்சயம் அனைவருக்கும் லார்ட்ஸ் மைதான பால்கனியில் தனது ஜெர்சியை கழற்றி சுற்றிய சம்பவம்தான் நினைவுக்கு வரும். அந்தப் போட்டியின் மூலம் இந்திய அணி இங்கிலாந்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இங்கிலாந்து அணிக்குப் பதிலடி கொடுத்தது.
இதனைக் குறிக்கும் விதமாக இந்திய முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், 2002 நாட் வெஸ்ட் சீரிசின்போது நசீர் ஹுசைனுடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டார். அதனோடு, இந்தப் புகைப்படம் நினைவில் இருக்கிறதா? என நசீர் ஹுசைனை இணைத்துக் கேள்வி எழுப்பினார்.