தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரஞ்சியில் விளையாட வேண்டாம் - பும்ராவுக்கு கங்குலி அறிவுரை - Sourav Ganguly

சூரத்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பங்கேற்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.

ganguly, bumrah, பும்ராவுக்கு கங்குலி அறிவுரை
ganguly, bumrah

By

Published : Dec 25, 2019, 6:34 PM IST

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்துவருகிறார். இதனிடையே அறுவை சிகிச்சைக்குப்பின் சமீபத்தில் வலைபயிற்சி மேற்கொண்ட பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது, இந்திய வீரர்களுக்கு பந்துவீசினார்.

இந்திய அணியின் பிசியோ மருத்துவர் பும்ரா உடற்தகுதியோடு இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து கடந்த திங்கட்கிழமை இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பும்ராவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதனிடையே பும்ரா, தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் இன்று தொடங்கிய கேரளா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது அவரது உடற்தகுதியை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது.

ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, ரஞ்சி போட்டியில் களமிறங்க வேண்டாம் என்றும், ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலயேயே பும்ரா இன்றையைப் போட்டியில் களமிறங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டி ஜனவரி ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடர்களின் மூலம் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஸ்டன் வெளியிட்ட புதிய அணி..! மாஸ் காட்டிய ’தல, தளபதி’!

ABOUT THE AUTHOR

...view details