இந்தாண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் உமர் அக்மல் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உமர் அக்மல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி மூன்று ஆண்டுகள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாது என தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இத்தகவலையறிந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, தனது டவிட்டர் பக்கத்தில் உமர் அக்மலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“மூன்று வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது உமர் அக்மலும் முட்டாள்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். அவரது திறமையை முற்றிலுமாக வீணடித்துவிட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட்டும் ஊழலுக்கு எதிராக செயல்முறையாற்றி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து உமர் அக்மலின் சகோதரர் கம்ரான் அக்மல் கூறுகையில், “உமருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைச் செய்தியறிந்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவருக்கு ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது என எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சூதாட்ட சர்ச்சை: பாகிஸ்தானின் நட்சத்திர வீரருக்கு மூன்று ஆண்டுகள் தடை!