ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு அரைசதங்கள் உட்பட 216 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில், மகளிர் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஏழாவது இடத்திலிருந்த ஸ்மிருதி மந்தனா மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
அதேசமயம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 82 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆஃப் ஃபார்மான ஜெமிமா ரோட்ரிகஸ் நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் நியூசிலாந்து வீராங்கனை சூசி பேட்ஸ் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் 21ஆம் தேதி மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. கடந்தமுறை அரையிறுதி வரை சென்ற இந்திய அணி இம்முறை கோப்பையுடன் நாடு திரும்புமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க:இறுதி போட்டி குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த திலக் வர்மா!