ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி (இரண்டாவது போட்டி) நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இன்று கிறிஸ்துமஸ் தினத்தை பலரும் கொண்டாடிவரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே இருவரும் சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் போர்ட் கேமை தங்களது கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும், "மார்னஸ் லாபுசாக்னே நீங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தால் நாம் இருவரும் இந்த கிரிக்கெட் போர்ட் கேமை ஆடலாம்" என ஸ்டீவ் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கிரிக்கெட் போர்ட் கேமுடன் ஸ்மித், லாபுசாக்னே ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் வளர்ந்துவரும் வீரராக திகழும் மார்னஸ் லாபுசாக்னே இறுதியாக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் விளாசி சிறப்பான ஃபார்மில் உள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின்போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு மாற்று வீரராக அறிமுகமான இவர், இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் ஆறு அரைசதம், மூன்று சதம் என 1,103 ரன்கள் எடுத்துள்ளார்
தனது சிறப்பான ஆட்டத்தால் அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 786 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்க தயாராகும் 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்ஸ்!