2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் மீது பந்தை சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
இவ்வழக்கின் விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட்டிற்கு ஓராண்டு தடையும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு விளையாடுவதற்கும், இரண்டு ஆண்டுகள் கேப்டன்ஷிப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்தாண்டு மூவர் மீதான தடையும் விலகி சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பினர். இருப்பினும் ஸ்மித் அணியின் ஒரு வீரராக மட்டுமே களமிறங்கினர். இந்நிலையில் ஸ்மித்தின் கேப்டஷிப் மீதான இரண்டு ஆண்டுகாலத் தடை இன்றோடு முடிவடைந்துள்ளது.