நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மாவின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் ஒருநாள், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. டி20 தொடரில் நான்கு போட்டிகளில் பங்கேற்ற அவர் இரண்டு அரைசதம் உட்பட 140 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, டெஸ்ட் தொடரில் இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளார் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். 20 வயதான இவர், தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறார்.