கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், ஐந்து பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான தெடர், ஐபிஎல் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திரமாக சமீபகாலமாக திகழ்ந்துவரும் ஸ்ரேயாஸ் ஐயர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருக்கும் வீரர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் சில மாயாஜால வித்தைகளைப் கற்றுவருகிறார்.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஸ்ரேயஸ் ஐயர் தனது தங்கை நடாஷாவுடன் இணைந்து, சீட்டுக்கட்டுகளை வைத்து மாயாஜாலம் செய்வது போன்ற காணொலியைப் பகிர்ந்துள்ளது. இந்தக் காணொலி தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தில் பரவிவருகிறது.
இதற்கு முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ‘மக்கள் ஊரடங்கு உத்தரவு’ என்ற பெயரில் மக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டம் என வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு தங்களது ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19: பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்த விராட், அனுஷ்கா!