2015ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காம் இடத்தில் களமிறங்கும் வீரர் குறித்த பிரச்னை 2019ஆம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டே வந்தது. இந்தப் பிரச்னைக்கு தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு கட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின்போது நான்காவது இடத்தில் களமிறங்கி ஒரு சதம், இரண்டு அரைசதம் என 200க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்து இந்திய அணிக்குள் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் கூடைப்பந்து விளையாட்டின் தீவிர ரசிகரான அவர், என்பிஏ போட்டிகளை நேரில் கண்டுகளிக்கவுள்ளார்.
69ஆவது ஆல் - ஸ்டார்ஸ் என்பிஏ போட்டிகள் பிப்.14 முதல் பிப்.16 வரை நடக்கிறது. கூடைப்பந்து விளையாட்டின் முக்கிய நட்சத்திரங்கள் ஆடும் இந்தப் போட்டி என்பதால் சர்வதேச ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.