இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நாட்டிங்ஹாம் நகரில் உள்ள டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீசத் தொடங்கியது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் அனைவரும் அடித்து ஆடினர்.
'பந்து அடிக்க சொன்னா... ஸ்டெம்ப அடிக்கிறார் இந்த பேட்ஸ்மேன்..!' - ஹிட்-அவுட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் ஹிட்-அவுட் முறையில் ஆட்டமிழந்ததை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஆட்டத்தின் பிற்பாதியில் களமிறங்கிய சோயப் மாலிக் அதிரடியாக ஆடி அசத்தினார். அப்போது மார்க்வுட் வீசிய 47ஆவது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட சோயப் மாலிக், எதிர்பாராதவிதமாக ஹிட்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். லென்த் பாலாக வீசப்பட்ட பந்தை லேட்டாக கட் அடிக்க முயற்சித்ததால் அவர், ஹிட் முறையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்க நேரிட்டது. அவர் இப்போட்டியில், 26 பந்துகளில் 41 ரன்கள் (4 பவுண்டரிகள்) குவித்தார்.
அவர் இதுபோன்று ஹிட்-அவுட் முறையில் ஆட்டமிழப்பது இரண்டாது முறையாகும். முன்னதாக அவர் கடந்த 2003ஆம் ஆண்டு இதே முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டுமுறை ஹிட்-அவுட்டில் ஆட்டமிழந்த ஆலன் பார்டர், குமார் சங்கக்காரா, மிஸ்பா-உல்-ஹக் உடன் மாலிக்கும் இணைந்துள்ளார். மாலிக்கின் இந்த அவுட்டை கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். இப்போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நிர்ணயித்த 341 ரன்கள் இலக்கை 49.3 ஓவரில் சேஸ் செய்து தொடரையும் 3-0 என கைப்பற்றியது.