2012ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் பவுன்சர் பந்துகளுக்கு ஐசிசி விதிமுறையை கொண்டுவந்தது. அதன்படி, பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர் பந்துகளை மட்டும்தான் வீச வேண்டும். அந்தப் பந்து பேட்ஸ்மேன்களின் தலைக்கு மேல் சென்றால் அது ஒயிடாக அறிவிக்கப்படும். அதேசமயம், பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் இரண்டாவது முறை பவுன்சர் பந்து வீசும்போது அவருக்கு நடுவர் எச்சரிக்கை வழங்குவார்.
அதை மீறி பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் மூன்றாவது முறையாக பவுன்சர் பந்துகளை வீசினால் அவருக்கு அந்த போட்டியில் பந்துவீச தடைவிதிக்கப்படும். அவருக்கு பதிலாக அணியில் உள்ள வேறொரு நபர் அந்த ஓவரை வீச வேண்டும் என தெரிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இதேபோல், டி20 போட்டிகளில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்துதான் வீச வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் விதிக்கப்பட்டுள்ள பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.