தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரஹானேவை கலாய்த்த தவான்! - ரஹானேவின் இன்ஸ்டாக்ராம் பதிவு

ரோகித் சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரஹானேவின் பதிவிற்கு, தவான் அடித்த கமென்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dhawan posts hilarious response to Rahane's pic with Rohit
Dhawan posts hilarious response to Rahane's pic with Rohit

By

Published : Jun 18, 2020, 1:30 AM IST

ஊரடங்கு காரணமாக, தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, ரோகித் சர்மா தன்னை நேர்காணல் எடுக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், 'ரோகித் ‌ என்னிடம் என்ன கேட்கிறார்? அதற்கு நான் என்ன பதில் கூறுகிறேன் என்பதை ரசிகர்கள் கமென்ட் செய்யுங்கள்' எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவை கண்ட ஷிகர் தவான், 'உங்கள் வாயில் என்ன இருக்கிறது என்று ரோகித், ரஹானேவிடம் கேட்பதாகவும்; அதற்கு ரஹானே தனது வாயில் மசாலா இருப்பதாக பதில் அளிப்பதாகவும்' கமென்ட் அடித்திருந்தார்.

ரஹானேவை கலாய்க்கும் விதமாக தவான் அடித்த கமென்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details