இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக திகழ்பவர் ஷிகர் தவான். 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஷிகர் தவான் அறிமுகம் ஆனார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி கரமாக பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தவானின் பதிவில், "இந்திய அணிக்காக 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். இதைவிட பெரிய மரியாதை எனக்கு கிடைக்கப்போவதில்லை. இத்தனை ஆண்டுகளாக எனது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனக்கு வாழ்நாள் முழுவதும் நினைவுகளைத் தந்துள்ளது. அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.