தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாற்று வீரராக களமிறங்கும் ஷிகர் தவான்! - விஜய் சங்கர்

இந்தியா ’ஏ’- தென்னாப்பிரிக்க ’ஏ’ அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் காயமடைந்த வீரருக்கு பதிலாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் களமிறங்கவுள்ளார்.

dhawan

By

Published : Aug 31, 2019, 1:18 PM IST

இந்தியாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க ’ஏ’ அணி அதிகாரப்பூர்வமற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய ’ஏ’அணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டின் விஜய் சங்கர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து இந்திய சீனியர் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவுள்ள ஷிகர் தவான் தென்னாப்பிரிக்க ’ஏ’ அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் தொடரில் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் திருவனந்தபுரத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ’ஏ’ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க ’ஏ’ அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details