தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இப்போட்டியின் வர்ணனையாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஸ்கே வீரருமான ஷேன் வாட்சன் இன்று திருநெல்வேலி வந்துள்ளார்.
வள்ளுவனை சந்தித்த சிஎஸ்கேவின் வல்லவன் - வாட்சன்
கன்னியாகுமரி: டி.என்.பி.எல். தொடருக்கு சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி வந்துள்ள சிஎஸ்கே வீரர் வாட்சனின் புகைப்படம் இணையதளத்தில் அதிகம் பகிரடப்பட்டு வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அவர் திருநெல்வேலியில் இருந்து கார்மூலம் கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் விவேகானந்தா் நினைவு மண்டம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ரசித்தார். வாட்சனின் வருகையால், அங்குயிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவருடன் புகைப்படம், செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, காரின் மூலம் அவர் மீண்டும் திருநெல்வேலி புறப்பட்டுச் சென்றார். வாட்சன் திருவள்ளுவர் சிலை முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிஸ்கே தனது அதிகார்வபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
அதில், 133 அடி உள்ள வள்ளுவனை வல்லவன் வாட்சன் (ஜெர்சி எண் 33) சந்தித்துள்ளார் என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தது. தற்போது, வாட்சனின் இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.