சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பிரபல நட்சத்திர வீரர்களின் அக்கவுண்ட்டுகள் எளிதாக ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் இம்முறை சிக்கியவர் யாரென்றால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரருமான வாட்சன்தான்.
ஹேக் செய்யப்பட்ட சிஎஸ்கே வீரரின் ட்விட்டர் பக்கம்! - வாட்சன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் வாட்சனின் ட்விட்டர் பக்கம் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று அரைமணி நேரம் வரை ஹேக் செய்யப்பட்டு பல்வேறு சர்ச்சையான ட்வீட்டுகள் பதிவிடப்பட்டன. அதேபோல், அவரது பெயரும் crimin.al என மாற்றப்பட்டு, புகைப்படமும் மாற்றப்பட்டது. அதையடுத்து ரசிகர்கள் எச்சரிக்கை கொடுத்தபின், வாட்சனின் ட்விட்டர் பக்கம் பழைய நிலைக்கு திரும்பியது. இந்த சம்பவம் குறித்து ஷேன் வாட்சன் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட ஹேக்கர்கள் முயற்சியா?...