கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளால், அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமலும், உணவின்றியும் தவித்து வந்தனர்.
இதையடுத்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, தனது வீட்டருகில் உணவு மையங்களை அமைத்தும், உத்தரப்பிரதேசத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர்களுக்கு உணவு, முகக்கவசங்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கியும் வருகிறார்.