தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2 ஆண்டு தடை ஓவர்... கம்பேக் கொடுக்கவுள்ள ஷாகிப் - ரசிகர்கள் மகிழ்ச்சி! - வங்கதேச கிரிக்கெட் வாரியம்

மேட்ச் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இரண்டாண்டு தடையிலிருந்த வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன், இலங்கை அணிக்கெதிரான தொடரில் மீண்டும் அணியில் இணைவார் என வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரஸ்ஸல் டோமிங்கோ தெரிவித்துள்ளார்.

shakib-likely-to-make-international-comeback-on-sri-lanka-tour
shakib-likely-to-make-international-comeback-on-sri-lanka-tour

By

Published : Aug 13, 2020, 4:34 AM IST

மேட்ச் பிக்சிங் தொடர்பாக சூதாட்டக்காரர்கள் அணுகியதை ஐசிசியிடம் மறைத்ததாக, வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டாண்டுகள் தடைவிதிப்பதாக ஐசிசி அறிவித்திருந்தது.

2018ஆம் ஆண்டு இவர் மீது தொடங்கிய தடைக்காலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து இந்தாண்டு திட்டமிடப்பட்டுள்ள வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரின்போது, ஷாகிப் அல் ஹசன் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டோமிங்கோ, " ஷாகிப் இரண்டு ஆண்டுகள் விளையாடமல் இருந்தது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், கரோனா தொற்று காரணமாக எங்கள் அணி வீரர்களும் கிட்டத்திட்ட ஆறு மாதங்கள் ஓய்வில்தான் இருந்து வருகின்றனர்.

தற்போது வங்கதேசம்-இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் உறுதி செய்யப்பட்டால், அதில் ஷாகிப் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், வீரர்களின் உடற்தகுதியையும் நாங்கள் பின்பற்ற வேண்டியுள்ளது. அதனால் ஷாகிப் அணியின் மற்ற வீரர்களுடன் பயிற்சியை மேற்கொள்ள நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details