தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி வேகத்தில் வீழ்ந்த வங்கதேசம்! - Mohamad Mithun

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

shaheen-bundles-bangladesh-for-233-on-first-day
shaheen-bundles-bangladesh-for-233-on-first-day

By

Published : Feb 8, 2020, 12:09 PM IST

பத்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணி சொந்த நாட்டு மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20 தொடருக்கு பிறகு, டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அஸார் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தமீம் இக்பால் 3, சைஃப் ஹசன் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 3 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் - கேப்டன் மொமினுல் ஹக் சிறிது நேரம் தாக்குபிடித்தனர்.

அரைசதம் அடித்த மிதுன்

சிறப்பாக ஆடிய நஜ்முல் 110 பந்துகளில் 44 ரன்களிலும், கேப்டன் மோமினுல் 30 ரன்களிலும் வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மஹ்முதுல்லா 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் 107 ரன்களுக்கு ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி திணறியது.

4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாகின் அப்ரிடி

இதன்பின் மிதுன் ஒருமுனையில் சிறப்பாக ரன்கள் சேர்க்க, டெய்லண்டர்கள் கொஞ்சம் அவருக்கு ஒத்துழைத்தனர். சிறப்பாக ஆடிய 140 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க வங்கதேச அணி 82.5 ஓவர்களில் 233 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அத்துடன் முதல்நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக இளம் வீரர் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையின், அப்பாஸ், சொஹைல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து போட்டி மழையால் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details