ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா பங்கேற்றார்.
இதன்மூலம் இளம் வயதிலேயே உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் கிரிக்கெட்டர் என்ற வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஷகுவானா குயின்டின் (Shaquana Quintyne) சாதனையை முறியடித்துள்ளார்.
2013 மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஷகுவானா குயின்டின், தனது 17 வயது 45 நாட்களில் இச்சாதனை படைத்த நிலையில், ஷஃபாலி வர்மா அதை தனது 16 வயது 40 நாட்களில் எட்டினார்.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலே, பெத் மூனி ஆகியோரது அதிரடியால் 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது.
இதன்பின், களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் நட்சத்திர வீராங்கனையான ஷஃபாலி வர்மா இரண்டு ரன்களில் மெகன் ஷட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் 163 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:2003 உலகக்கோப்பையை மீண்டும் கண்முன் நிறுத்திய ஆஸி. மகளிர் அணி!