தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷஃபாலி வர்மா! - மகளிர் தரவரிசைப் பட்டியல்

டி20 போட்டிகளுக்கான மகளிர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

shafali-verma-achieves-number-one-spot-in-icc-womens-t20i-rankings
shafali-verma-achieves-number-one-spot-in-icc-womens-t20i-rankings

By

Published : Mar 4, 2020, 8:28 PM IST

இந்திய அணியின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா. 16 வயதேயாகும் ஷஃபாலி, அதிரடியான ஆட்டத்தை சர்வதேச ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரின் வருகையால் இந்திய அணியின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நடந்துவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்டங்களில் ஆடி 146.96 ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஷஃபாலி வர்மா 19 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

டாப் 10இல் இடம்பிடித்த இந்திய வீராங்கனைகள்

இதுவரை 18 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஷஃபாலி தரவரிசையில் முன்னணி வீராங்கனைகள் ஓவர்டேக் செய்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் ஷஃபாலி வர்மா முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் சுசி பேட்ஸ் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் பின்தங்கி 6ஆவது இடத்திலும், ஜெமீமா 9ஆவது இடத்திலும் உள்ளனர்.

டாப் 10இல் இடம்பிடித்த இந்திய வீராங்கனைகள்

இதேபோல் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கு தரவரிசையில் இந்திய அணியின் தீப்தி ஷர்மா 5ஆவது இடத்திலும், ராதா யாதவ் 7ஆவது இடத்திலும், பூனம் யாதவ் 8ஆவது இடத்திலும் உள்ளனர். இதில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டன் முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க:'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

ABOUT THE AUTHOR

...view details