தலைநகர் டெல்லியில் நாளுக்குநாள் காற்று மாசு அபாய நிலையைத் தாண்டிவருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகமூடி அணிந்துகொண்டு வெளியே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், காற்று மாசால் தனது மகள் அவதிப்படுவதாக சுரேஷ் ரெய்னா ட்வீட் செய்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அளவு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால், என் மகள் கிராசியா சுவாசப் பிரச்னையால், பரிதவித்துவருகிறார். அதனால், வெளியே செல்லக்கூட முகமூடி அணிந்து அவள் செல்வதைப் பார்ப்பது மிகவும் கொடுமையாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுக் கிடைக்க தற்போது அனைவரும் ஒன்றிணைந்து வேலைப் பாரக்க வேண்டியது அவசியமாகும்" எனப் பதிவிட்டிருந்தார்.