தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஷஸ் டெஸ்ட்: இரண்டாவது போட்டிக்கான அணி விவரம்! - ashes

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டுக்கான அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

archers

By

Published : Aug 14, 2019, 3:34 AM IST

வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் போட்டியில் 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள்ளது. இதற்காக ஆடும் அணிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியை பெறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன்னுக்கு பதிலாக ஜோஷ் ஹசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணிகள் விபரம்:

இங்கிலாந்து: ஜோ ரூட் (கே), ஜானி பேர்ஸ்டோவ், ரொரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரான், கிறிஸ் ஓக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட்.

ஆஸ்திரேலியா:டிம் பெயின் (சி), கேமரூன் பான்கிராப்ட், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லியோன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.

ABOUT THE AUTHOR

...view details