தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றதால் இன்று நடந்த மூன்றாவது போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டி காக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் - பவுமா இணை அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 84 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 34 ரன்களிலும் பவுமா 49 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வாண்டர் டூசன் 11 ரன்களில் வெளியேற, கிளாஸன் - மில்லர் இணை இங்கிலாந்து பந்துவீச்சை அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டது.
அதிரடியாக ஆடிய கிளாஸன் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய மில்லர் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 223 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் - பெயர்ஸ்டோவ் இணை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அசாத்தியமாக எதிர்கொண்டது. இந்த இணையின் அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 9 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. பட்லர் 23 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.