தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இதை செய்யுங்கள் உலகக்கோப்பை உங்களுக்குதான் - கவாஸ்கர் அட்வைஸ்! - மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு

டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் , விராட் கோலி & கோ பீல்டிங்கில் முன்னேறினால் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம் என அறிவுரை கூறியுள்ளார்.

Save runs, put pressure on opposition: Gavaskar to Kohli & Co
Save runs, put pressure on opposition: Gavaskar to Kohli & Co

By

Published : Dec 11, 2019, 8:01 PM IST

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

கவாஸ்கர் கூறுகையில், என்னை பொறுத்தமட்டில் கிரிக்கெட்டில் பீல்டிங் என்பது மிக அவசியமான ஒன்றாகும். ஏனெனில் பீல்டிங்கில் ரன்களை கட்டுபட்டுத்தும்போது எதிரணிக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். இதனால் இந்திய அணி பீல்டிங்கில் முன்னேறினால் வருகிற 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பீல்டிங்கில் தவறிழைத்ததால்தான் தோல்வியடைந்தது. அதனால் பீல்டிங்கில் இந்தியா முன்னேறும்பட்சத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதை எந்த அணியினாலும் தடுக்க இயலாது எனவும் கூறியுள்ளார்.


இதையும் படிங்க: ரஷித் கானுக்கு டாடா காட்டிய ஆப்கானிஸ்தான்..
!

ABOUT THE AUTHOR

...view details