12-வது ஐபிஎல் சீசன் தொடர் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணியின் தூதருமான வார்னே இணைந்துள்ளார்.
சஞ்சு சாம்சனை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட்! - சஞ்சு சாம்சன்
டெல்லி: 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தொடர் நாயகன் விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் வெல்வார் என ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் வார்னே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த தொடரினை மிகவும் எதிர்பார்ப்பதாகவும், ராஜஸ்தான் அணி நிச்சயம் இந்த முறை கோப்பையைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களும், அனுபவ விரர்களும் சரிவர அணியில் கலந்துள்ளதாகவும், அதேபோல் தொடர் நாயகன் விருதை இளம் வீரர் சஞ்சு சாம்சன் நிச்சயம் வெல்வார். அவருடைய பார்ம் அபாரமாக உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஹானே தலமையிலான ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரின் முதல் சீசன் கோப்பையை வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.