தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மும்பை இந்தியன்ஸ் பிடிச்சாலும் ஒரு நியாயம் வேணாமா? சஞ்சய் மஞ்ரேக்கர் - ஜடேஜா குசும்புகள்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஞ்சய் மஞ்ரேக்கர், ஜடேஜா ஆகியோர் இடையே மீண்டும் ட்விட்டரில் ஒரு காரசாரமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

By

Published : Jan 27, 2020, 2:51 PM IST

Sanjay Manjrekar Ravindra jadeja
Sanjay Manjrekar Ravindra jadeja

கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் வீரர்கள் குறித்தும் அவ்வபோது முன்னாள் வீரர்கள் கருத்து கூறுவது இயல்பான ஒன்று என்றபோதிலும், அந்தக் கருத்துகள் சில சமயங்களில் செய்தியாகும் அளவிற்கு சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதுண்டு. அது போன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர், ட்விட்டர் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும்.

இதனிடையே சஞ்சய் மஞ்ரேக்கரின் சமீபத்திய ட்விட்டும் அதற்கு பதில் கேட்டு ரவீந்திர ஜடேஜா பதிவிட்ட ட்விட்டும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் விளாசிய இந்திய வீரர் கே.எல். ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஜடேஜா பதிவிட்ட கமெண்ட்

இதனிடையே முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், ஆட்டநாயகன் விருதை பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு அளித்திருக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, அந்தப் பந்துவீச்சாளரின் பெயர் என்ன என்று கூறுங்கள், தயவு செய்து குறிப்பிடுங்கள் என கமெண்ட் பதிவிட்டிருந்தார்.

இதற்கு சஞ்சய் மஞ்ரேக்கர், ஹா ஹா... நீங்கள் இல்லை பும்ரா என்று பதிவிட்டு. ஏனெனில் அவர் 3, 10, 18, 20 ஆகிய ஓவர்களில் கட்டுக்கோப்பாக அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் வீசினார் எனப் பதிவிட்டிருந்தார்.

சஞ்சய் மஞ்ரேக்கரின் நக்கல் ட்வீட்

மஞ்ரேக்கரின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வார்த்தையால் நையப்புடைத்தனர் என்றே கூறலாம். அதில் ஒரு ரசிகர், உங்கள் பார்வைக்கு எப்போதும் பும்ராதான் தெரிவார். ஏனென்றால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார் எனப் பதிவிட்டிருந்தார்.

ரசிகரின் கமெண்ட்

நேற்றையப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் 132 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். அதில் ஜடேஜா நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். உண்மையில் நேற்றையப் போட்டியில் பும்ராவைவிட ஜடேஜா கட்டுக்கோப்பாகவே பந்துவீசியிருந்தார் என்று கூறலாம்.

அதன் காரணமாகவே ஜடேஜா, கேலியாக யார் மஞ்ரேக்கரின் ட்விட்டிற்கு பதில் ட்விட்டாக அந்த பந்துவீச்சாளரை குறிப்பிடும்படி கூறியிருந்தார். ஆனால் மஞ்ரேக்கர், தனக்கே உரித்தான பாணியில் மீண்டும் ட்விட் செய்து ரசிகர்களிடம் சிக்கிக்கொண்டார்.

முன்னதாக கடந்த உலகக்கோப்பை தொடரின்போது ஜடேஜாவை, துணுக்கு வீரர் என்று ஏளனமாக மஞ்ரேக்கர் குறிப்பிட்டதற்கு ஜடேஜா பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details