பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல், குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பின் எந்த நாட்டு வீரரும் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளைப் போலவே பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தானில் பல நட்சத்திர வீரர்களும் விளையாட மறுப்பு தெரிவித்ததால், இரண்டு சீசன்கள் துபாயில் நடத்தப்பட்டது. அதனையடுத்து 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இனிவரும் அனைத்து பிஎஸ்எல் தொடர்களும் பாகிஸ்தானில் நடத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கியது. ஆனால் பல வீரர்கள் மீண்டும் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான டேரன் சமி மட்டும் பாகிஸ்தானில் விளையாட ஒப்புதல் தெரிவித்தார். மேலும் தற்போது வரை பாகிஸ்தானில் நடைபெற்ற அனைத்து பிஎஸ்எல் தொடர்களிலும் பங்கேற்று, தான் கேப்டனாக செயல்பட்ட பெஷாவர் ஜால்மி அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார்.