இந்தியத் திரையுலகில் பாலிவுட் திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. தற்போது பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர் நடிகர் சல்மான் கான். இவருக்கு திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனியின் ரசிகன் என பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் சல்மான் கான் தோனியைப் பற்றி கூறுகையில், எனக்கு இந்திய அணியில் மிகவும் பிடித்த வீரர் தோனிதான். அவர் ஒரு தபாங் பிளேயர், பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த வீரர் என்றார்.
தற்போது இத்தகவலையறிந்த தோனி ரசிகர்கள், சல்மான் கானின் இந்தப் பதிலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஜெர்மன் கால்பந்து தொடரில் பங்கேற்ற முதல் இந்தியர்!