சர்வதேச கிரிக்கெட்டில் பந்துகளை ஸ்விங் செய்வதற்காக பந்துவீச்சாளர்கள் உமிழ்நீர் பயன்படுத்தி வந்தனர். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்த விவகாரம் பற்றி பேசியுள்ளார்.
'உமிழ்நீர் தடவாவிட்டால் பந்துவீச்சாளர்கள் ரோபோவாக மாறுவார்கள்' - வாசிம் அக்ரம் - பந்துவீச்சாளர்கள் இயந்திரங்களாவார்கள்
கராச்சி: பந்துகளில் உழிழ்நீர் பயன்படுத்த ஐசிசி தடை விதித்திருக்கும் நடவடிக்கை, பந்துவீச்சாளர்களை ரோபோவாக்கும் என வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ''ஸ்விங் இல்லாமல் பந்துகளை வீசுவது என்பது பந்துவீச்சாளர்களை ப்ரோகிராம் செய்த ஒரு ரோபோவாக்கும். சிறுவயதிலிருந்தே நான் உமிழ்நீர் பயன்படுத்தியே ஸ்விங் செய்து வந்ததால், எனக்கும் என்ன செய்வது என தெரியவில்லை. இந்த நேரத்தில் பந்துகள் கடினமாவதற்காக பந்துவீச்சாளர்கள் காத்திருக்க வேண்டும்.
வியர்வையைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிகமாகப் பயன்படுத்தினால், பந்து ஈரமாகும். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பந்து எப்படி உள்ளது என்பதைப் பார்த்த பின்னரே முடிவுகள் எடுக்க முடியும்'' என்றார்.