இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் தற்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்திய அணியில் இடம்பெறாமல் தனது உடல் நலனில் கவனம் செலுத்திவருகிறார்.
இவர் கடந்த சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி, அவரின் மகள் ஸிவா, ஆகியோருடன் இணைந்து எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு அதில், 'உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன்' எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகியது.