தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா எதிரொலி: கைவிடப்பட்ட இங்கிலாந்து - தெ.ஆப்பிரிக்கா போட்டி!

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

SAfrica-England ODI delayed again after more COVID-19 cases
SAfrica-England ODI delayed again after more COVID-19 cases

By

Published : Dec 6, 2020, 4:53 PM IST

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதாலவது ஒருநாள் போட்டி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இரண்டு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் போட்டி டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று கேப்டவுனில் தொடங்கவிருந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியிருந்த விடுதி ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, இப்போட்டியை கைவிடுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது.

இதையடுத்து இருநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் மீண்டும் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சோதனையின் முடிவுகள் அடிப்படையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:AUS VS IND: வேட், ஸ்மித் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி.,

ABOUT THE AUTHOR

...view details