ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் அடுத்த மாதம் முதல் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார். இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டது.
ரசிகர்கள், வீரர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்: பிசிசிஐ - T20
கிரிக்கெட் போட்டிகள் எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பே தற்போது முக்கியம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் பேசுகையில், "டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆர்வமாகவே உள்ளது. ஆனால் இந்திய அணியின் பயணம் பற்றி மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும். என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அரசி கூறும் அறிவுரைகளின்படியே முடிவு செய்ய முடியும்.
இப்போதே ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிப்பது சரியாக இருக்குமா என தெரியவில்லை. மிகவும் அபாயகரமான முடிவாகவும் அதனைபா பார்க்கிறோம். அதேபோல் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் வெகு நாள்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அணி அதில் கலந்துகொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் முடிவு செய்ய முடியும். எங்களுக்கு ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பே முக்கியம்" என்றார்.