மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பெண்களுக்கு வாழ்த்துகளைக் கூறி வருன்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மகளிர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது வாழ்வில் முக்கியமான ஐந்து பெண்களைப் பற்றி பேசியுள்ளார்.
அதில் முதலாவதாக தனது தாய் ரஜினி பற்றி பேசும் சச்சின், வாழ்நாள் முழுவதும் அவர் நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா, மகிழ்ச்சியாக இருக்கிறேனா என மற்ற அம்மாக்களை போல் உறுதி செய்துகொண்டே இருப்பவர் எனப் பேசியுள்ளார்.
இரண்டாவதாக தனது கிரிக்கெட் பயிற்சிக்காக மைதானத்தின் அருகிலிருந்த உறவினரான மங்களா வீட்டில் இருந்தது பற்றி பேசியுள்ளார். தனக்கு அவர் இரண்டாம் தாயை போன்றவர் என்றும் கூறியுள்ளார்.
மூன்றாவதாக தனது மனைவி அஞ்சலி பற்றி பேசும்போது, நான் கிரிக்கெட்டை சிறப்பாக ஆடியதற்கு மிக முக்கிய காரணம் அவர்தான். ஏனென்றால் நான் கிரிக்கெட் விளையாடுவதற்காக குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் அவர் ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயம் என்றார்.