நாடு முழுவதும் இன்று மறைந்த முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்தின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்நாளை முதியோர் இல்லத்தில் செலவிட்டு வருகின்றார்.
கடவுள்களின் இல்லத்தில் 'கிரிக்கெட் கடவுள்'! - national sports day
இந்தியாவில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதியோர் இல்லத்தில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
sachin tentulkar
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சில தருணங்களை புனித அந்தோனி முதியோர் இல்லத்தில் உள்ளோரிடம் செலவிடுகிறேன், இவர்களின் அன்பு இன்றியமையாதது. இவர்களுடன் நான் கேரம் விளையாடியது இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. நம் நாட்டின் பிரதமர் மோடி சரியாகத்தான் சொல்லியுள்ளார், விளையாட்டு என்பது அனைவருக்கும் சமமானது என்று', என பதிவிட்டுள்ளார்.
தற்போது அவரின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.