மறைந்த இந்திய ஹாக்கி ஜாம்பவான் வீரரான தயான் சந்த்தின் பிறந்த நாளான இன்று, தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தந்த விளையாட்டுகளை சேர்ந்த வீரர்களும் இந்த நாளைக் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கர், மீண்டும் பேட்டிங்கில் களமிறங்கி தனது ரசிகர்களுக்கு ட்ரீட் தந்துள்ளார்.
தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு இவர், மும்பையில் பாலிவுட் நடிகர்களான வருண் தவான் மற்றும் அபிஷேக் பச்சேன் ஆகியோருடன் கலி (Gully) கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், வேலையின் நடுவே விளையாடுவது எப்போதுமே மகிழ்ச்சியானதுதான். அபிஷேக் பச்சன், வருண் தவானுடன் ஷூட்டிங்கில் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சியளித்ததாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார். சச்சின் மீண்டும் பேட்டிங் செய்து விளையாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.