தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜேம்ஸ் பாண்ட் ஆக மாறிய கிரிக்கெட் கடவுள்..! - James Bond 007

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் தனது காரை ஓட்டுநரின்றி பார்க்கிங் செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடவுள்

By

Published : Aug 2, 2019, 9:18 PM IST

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், கார் ஓட்டுவதில் பெரும் ஆர்வம் உள்ளவர். இது அவரது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.

தற்போது சச்சின் டெண்டுல்கர் காரில் அமர்ந்திருப்பது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் ஓட்டுநர் சீட்டிற்கு அருகில் இருக்கும் சீட்டில் சச்சின் அமர்ந்துள்ளார். அப்போது அந்த காரின் ஓட்டுநர் சீட்டில் யாரும் இல்லை.

சச்சின் டெண்டுல்கர் பேசும் வீடியோ

அப்போது, அந்த கார் ஓட்டுநர் இன்றி இயங்கி, பார்க்கிங் ஏரியாவில் சரியாக நின்றது. இந்த வகையிலான கார்களை பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்திருந்தாலும், முதன்முறையாக வீடியோவில் சச்சின் இயக்கி இணையதளங்களில் பதிவேற்றியுள்ளது ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.

மேலும் சச்சின் டெண்டுல்கர் எவ்வகையான காரில் அமர்ந்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ABOUT THE AUTHOR

...view details